Trending News

துப்பாக்கி சூட்டில் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் உயிரிழப்பு

(UTV|COLOMBO)-இன்று (09) காலை 7.45 மணியளவில் புறக்கோட்டை – ஆதிவால் வீதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் மாநகர சபை உறுப்பினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியில் உள்ள பழக்கடை ஒன்றிற்குள் வைத்து இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

40 வயதுடைய கிருஷ்ணப்பிள்ளை கிருபாணந்தன் எனும் கிருஷ்ணா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நபர் கொழும்பு மாநகர சபையின் சுயாதீன கட்சி உறுப்பினர் ஒருவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரை கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

புறக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணகளை மேற்கொண்டு வருகின்றனர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

AirAsia warns of free ticket scam

Mohamed Dilsad

Belgium beat England to finish third

Mohamed Dilsad

பரீட்சைகளின் போது முறையற்ற செயற்பாடுகள் குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்

Mohamed Dilsad

Leave a Comment