Trending News

மண்ணெண்ணெய் விலையை குறைக்கும் யோசனை

(UTV|COLOMBO)-அமைச்சரவை அனுமதிக்கு அமைய இன்று நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 70 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.

இது தொடர்பான யோசனை இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.

இதேவேளை, மீனவ சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அபிவிருத்தி அமைச்சர் விஜித் விஜயமுனி சொய்சாவுக்கிடையே சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றது.

இதன்போது, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை 70 ரூபாவாக குறைக்கும் யோசனைக்கு இணக்கம் வெளியிடப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் 10 ஆம் திகதி நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

இதன்போது, 44 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 101 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

57 ரூபா விலை அதிகரிப்புக்கு எதிராக சிலாபம், நீர்கொழும்பு, பேருவளை உள்ளிட்ட பல பிரதேசங்களை சேர்ந்த கடற்றொழிலாளர்கள் எதிர்ப்பினை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Nimal Lanza denies involvement in garbage issue

Mohamed Dilsad

“No legal basis to approach ICJ against Sri Lanka” says India

Mohamed Dilsad

Fair weather to continue

Mohamed Dilsad

Leave a Comment