Trending News

ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-வெல்லம்பிட்டியவில், லங்சியாவத்தைக்கு திரும்பும் சந்திக்கு அருகில் ஒரு தொகை ஹெரோய்ன் போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் போதை தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது சந்தேகநபரிடம் இருந்து 604 கிராமும் 920 மில்லினிராம் நிறையுடைய ஹெரோய்ன் போதைப் பொருளும் 53,780 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

வெல்லம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உள்ளதுடன், பொலிஸ் போதை தடுப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

උසස් පෙළින් පස්සේ මොකද කරන්නෙ? | රජය මග පෙන්නයි

Mohamed Dilsad

පළාත් පාලන ආයතනවල බලය පිහිටුවීමේදී ඇතැමුන් අධි තක්සේරුවෙන් කටයුතු කළා – පාර්ලිමේන්තු මන්ත්‍රී රවී කරුණානායක

Editor O

Senanayake says will support a Premier nominated by UNP

Mohamed Dilsad

Leave a Comment