Trending News

சட்டவிரோத சிகரெட்டுகளுடன் பெண் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிக்கரெட் தொகைகளை இலங்கைக்கு கொண்டு வந்த சீன நாட்டு பெண் ஒருவர் இன்று (27) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சீன நாட்டு பெண் 44 வயது நிரம்பியவர் எனவும் டுபாய் நாட்டில் தாயாரிக்கப்பட்ட 20 ஆயிரத்து 980 சிகரெட்க்களை​ அவரிடம் இருந்து மீட்டுள்ளதாகவும் சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட சிகரெட்க்களின் பெறுமதி சுமார் ஒரு மில்லியன் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பெண் டுபாயில் இருந்து FZ-557 விமானத்தில் இன்று அதிகாலை 2.30 மணியளவில் இலங்கையை வந்தடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பெண்ணிடம் 50,000 ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்ட நிலையில், அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

විදේශ ඇමති විජිත ජිනීවා යයි

Editor O

Trump targets legal migrants who get food aid

Mohamed Dilsad

விஸ்வாசம் ஸ்டைலில் ஹர்பஜன் அசத்தல் ட்வீட்!

Mohamed Dilsad

Leave a Comment