Trending News

விமல் வீரவங்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகிய இருவரையும் உடனடியாக கைது செய்ய உத்தரவு

(UTV|COLOMBO)-விமல் வீரவங்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகிய இருவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

2016 ஆம் ஆண்டு ஐ.நா. மனித உரிமைகளுக்கான ஆணையர் ஷைத் அல் ராட் ஹுசைன் இலங்கைக்கு வருவதை எதிர்த்து பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் ஆர்பாட்டத்தில் ஈடுப்பட்ட குற்றத்திற்காக குறித்த இருவர் உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக குருந்துவத்த பொலிஸாரால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த வழக்கு இன்று (19) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது வழக்கு விசாரணைக்கு விமல் வீரவங்ச மற்றும் ஜயந்த சமரவீர ஆகிய இருவரும் வருகைதரவில்லை.

அத்துடன் இந்த வழக்கானது ஜூன் மாதம் 12 ஆம் மீள் விசாரணைக்கு எடுக்கப்படும் எனவும் நீதவான் உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Complaint to be filed against SAITM CEO

Mohamed Dilsad

உலகக் கிண்ணத்திற்காக இலங்கை அணி இன்று(07) பிரித்தானியா பயணம்

Mohamed Dilsad

“New Cabinet likely on Monday,” Muthuhettigamage says

Mohamed Dilsad

Leave a Comment