Trending News

லொறி விபத்து – ஐவர் படுங்காயம்

(UTV|NUWARA ELIYA)-கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் லொறி ஒன்று பிரதான வீதியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியதில் ஐந்து பேர் பலத்த காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இன்று (19) காலை 10 மணியளவில் இவ்விபத்து நேர்ந்துள்ளதாக திம்புள்ள பத்தனை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

நோட்டன்பிரிட்ஜ் பகுதியிலிருந்து பத்தனை பகுதிக்கு சென்ற குறித்த லொறி தலவாக்கலை – ஹட்டன் பிரதான வீதியில் கொட்டகலை கொமர்ஷல் பகுதியில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

பாரிய வளைவு காரணமாக லொறியின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாததன் காரணமாக இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.

லொறியில் ஏழு பேர் பயணித்துள்ளதாகவும், இதில் மூன்று பெண்களும், ஒரு குழந்தையும், ஒரு ஆணும் அடங்களாக ஐவர் கடும் காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Hemasiri and Pujith further remanded

Mohamed Dilsad

Australia’s strawberry needle scare widens

Mohamed Dilsad

இன்றைய வானிலை…

Mohamed Dilsad

Leave a Comment