Trending News

புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மூவர் நியமனம்

(UDHAYAM, COLOMBO) – மூன்று புதிய மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையிலபதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த நிகழ்வில் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகளான ஏ.ஏ.பி.ஆர்.அமரசேக்கர, ஏ.எல்.ஷிரான் குணரத்ன மற்றும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி அரச தலைமை சட்ட ஆலோசகர் ஜனக் த சில்வா ஆகியோரே மேன் முறையீட்டு நீதிமன்ற நிதிபதிகளாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்னாண்டோ கலந்துகொண்டார்.

Related posts

“Criticizing national security hinder country’s development” – President Sirisena

Mohamed Dilsad

EC seeks additional Rs 1.2 billion for Presidential poll

Mohamed Dilsad

පාස්පෝට් කන්තෝරුව අසළ උණුසුම් තත්ත්වයක්.

Editor O

Leave a Comment