Trending News

ஐரோப்பிய பகிரங்க டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டம் அன்டி முர்ரேவுக்கு

(UTV|COLOMBO) – ஐரோப்பிய பகிரங்க டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இங்கிலாந்து வீரர் அன்டி முர்ரே (Andy Murray) சாம்பியன் பட்டம் வென்றார்.

பெல்ஜியத்தில் நடைபெற்ற ஐரோப்பிய பகிரங்க தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய அவர், சுவிஸ் வீரர் ஸ்டானிஸ்லாஸ் வாவ்ரிங்காவுடன் (Stan Wawrinka) மோதினார்.

முதல் செட்டில் அதிரடியாக விளையாடிய வாவ்ரிங்கா 6-3 என்ற கணக்கில் வென்று முன்னிலை பெற்றார். அடுத்த 2 செட்களிலும் கடுமையாகப் போராடிய மர்ரே 3-6, 6-4, 6-4 என்ற கணக்கில் வென்று கிண்ணத்தை கைப்பற்றினார்.

இடுப்பு மூட்டு காயத்துக்கு கடந்த ஜனவரியில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட மர்ரே (32 வயது), நீண்ட ஓய்வுக்குப் பிறகு மீண்டும் விளையாட ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நிதி திணைக்களம் ஆகியன இணைந்து இம்மாநாட்டை ஒழுங்கு செய்துள்ளன

Mohamed Dilsad

பட்டாசுகள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தடை இல்லை

Mohamed Dilsad

மட்டகளப்பு-மன்னார் பிதேச சபைக்கான  உத்தியோகபூர்வ முடிவுகள்

Mohamed Dilsad

Leave a Comment