Trending News

ஆறாவது நாளாகவும் தொடரும் பணிப்புறக்கணிப்பு

(UTVNEWS|COLOMBO) – ரயில் தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் இன்று ஆறாவது நாளாகவும் தொடர்கின்றது.

சம்பள பிரச்சினையை முன்வைத்து ரயில் தொழிற்சங்கம் ஆரம்பித்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ரயில் பாதுகாவலர்கள் சங்க பிரதான செயலாளர் மனுர பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போது முன்னெடுக்கப்படும் பணிப்புறக்கணிப்புகளுக்கு தீர்வு வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உப குழு மற்றும் ரயில் தொழிற்சங்கங்களுடன் நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலான தீர்வு எவையும் முன்வைக்கப்படவில்லை என இலங்கை ரயில் பாதுகாவலர்கள் சங்க பிரதான செயலாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

ராஜகிரிய மேம்பாலத்தின் பணிகள் விரைவில் பூர்த்தி

Mohamed Dilsad

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டது

Mohamed Dilsad

වෛද්‍ය ඉල්ලීම් සඳහා විසඳුම් නැත්නම්, දැඩි වෘත්තීය ක්‍රියාමාර්ගවලට එළඹෙන බව වෛද්‍ය සංගමයෙන් දැනුම් දීමක්.

Editor O

Leave a Comment