Trending News

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்

(UTVNEWS|COLOMBO) – அரசாங்க பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் அனைத்தும் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை(02) திறக்கப்படவுள்ளன.

இதேவேளை, உயர்தர பரீட்சையின் முதற்கட்ட திருத்தப்பணிகள் இடம்பெறும் 12 பாடசாலைகள் மூன்றாம் தவணைக்காக எதிர்வரும் 16 ஆம் திகதி திறக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு றோயல் கல்லூரி, நாலந்தா கல்லூரி, இந்து கல்லூரி, களுத்துறை ஞானோதய மகா வித்தியாலயம், இரத்தினபுரி மிஹிந்து வித்தியாலயம், குருணாகல் சாந்த ஹானா வித்தியாலயம், கண்டி கிங்ஸ்வுட் கல்லூரி, விஹாரமஹாதேவி மகளீர் கல்லூரி, சீதாதேவி மகளீர் கல்லூரி, காலி வித்யாலோக கல்லூரி, பதுளை விஹாரமஹாதேவி மகளீர் கல்லூரி மற்றும் ஊவா மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகள் எதிர்வரும் 16 ஆம் திகதி திறக்கப்படவுள்ளன.

Related posts

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண் கொலை

Mohamed Dilsad

New State Media Heads appointed

Mohamed Dilsad

25 hospitalized, 5 serious, after Los Angeles highway crash

Mohamed Dilsad

Leave a Comment