Trending News

சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளை ஊக்குவித்து அமைச்சர் ரிஷாதினால் வர்த்த பெருவிழா நிகழ்வுகள் ஆரம்பம்

(UTVNEWS |COLOMBO ) –  கைத்தொழில், வர்த்தகம், நீண்டகால இடம்பெயர்ந்தோர் மீள்குடியேற்றம், கூட்டுறவு அபிவிருத்தி, தொழில் பயிற்சி மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு மற்றும் கொழும்பு வர்த்தக சங்கம் ஆகியன இணைந்து கொழும்பு புறக்கோட்டையில் ஏற்பாடு செய்துள்ள வர்த்த பெருவிழாவின் அங்குரார்ப்பண நிகழ்வை அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் நேற்று(10) காலை ஆரம்பித்து வைத்தார்.

சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளை ஊக்குவித்து அண்மைக்கால சம்பவங்களினால் வர்த்தக நடவடிக்கையில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவை நிவர்த்திக்கும் வகையில் நேற்றும்(10) இன்றும்(11) ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த விழாவில் கொழும்பு வர்த்தக சங்க தலைவர் டாக்டர் வெங்கடேஷ்வரன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர்களான புத்திக பத்திரன, வி.இராதாகிருஷ்ணன், அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related posts

யான் ஓயாவின் வான் கதவுகள்இன்று திறப்பு

Mohamed Dilsad

මැතිවරණ කොමිෂන් සභාවෙන් දැනුම්දීමක්

Editor O

Parent’s protest blocks main road in Walasmulla

Mohamed Dilsad

Leave a Comment