Trending News

பாகிஸ்தான் அணிக்கு தடையா?

(UTV|PAKISTAN) உலகக் கிண்ணத் தொடரில் இந்தியாவுடான போட்டியில் பாகிஸ்தான் அணி 89 ஓட்டத்தினால் படுதோல்வியடைந்தது. இதனால் பாகிஸ்தான் அணித் தலைவர் சர்ப்ராஸ் அஹமட் மீதும் அணியினர் மீதும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

அந் நிலையில் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தின் குஜ்ரன்வாலா பகுதியில் உள்ள கிரிக்கெட் ரசிகர் ஒருவர் சர்பராஸ் அகஹமட் தலைமையிலான பாகிஸ்தான் அணிக்கு தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

அத்துடன் இன்சமாம் உல் ஹாக் தலைமையிலான தேர்வுக் குழுவை கலைக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேற்படி இதை விசாரித்த நீதிபதி, மனு தொடர்பாக விரிவான பதில் அளிக்கக்கோரி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

 

 

 

Related posts

Tendulkar’s son picked in India U-19 squad for Sri Lanka tour

Mohamed Dilsad

சிறைகூடத்திலிருந்த கனவனுக்கு கஞ்சா கொண்டு சென்ற மனைவி கைது வீட்டிலிருந்து மிருக வேட்டையாடும் குண்டுகளும் மீட்பு

Mohamed Dilsad

Trump immigration plans: Supreme Court allows curb on migrants

Mohamed Dilsad

Leave a Comment