Trending News

முதல் கட்ட பேச்சுவார்த்தை வெற்றி

(UTV|COLOMBO) சிறிலங்கா சுதந்திர கட்சியின் பொதுசெயலாளர் தயாசிறி ஜெயசேகர புதிய கூட்டணியை அமைப்பது தொடர்பாக சிறிலங்கா சுதந்திர கட்சிக்கும் சிறிலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளித்திருப்பதாக கூறப்படுகிறது.

சிறிலங்கா சுதந்திர கட்சி மற்றும் சிறிலங்கா பொதுஜன முன்னணி என்பன இணைந்து புதிய கூட்டணியை அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை இன்று இடம்பெற்றது.

இந்த பேச்சுவார்த்தை எதிர்கட்சித் தலைவர் அலுவலகத்தில்  இன்று முற்பகல் 10.30 அளவில் ஆரம்பமானது.

பேச்சுவார்த்தை நிறைவில் செய்தியாளர்களிடம் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர, பேச்சுவார்த்தை வெற்றியளித்திருப்பதாகவும், அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 21ம் திகதி இடம்பெறும் என்றும் குறிப்பிட்டார்.

 

 

 

Related posts

ஓவியா மீது பொலிஸில் புகார்!

Mohamed Dilsad

Three pilgrims dead in Sri Pada

Mohamed Dilsad

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் உயிரிழப்பு

Mohamed Dilsad

Leave a Comment