Trending News

மாத்தறை – பெலியத்த ரயில் சேவை ஏப்ரலில் ஆரம்பம்

(UTV|COLOMBO)-புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள மாத்தறை – பெலியத்த ரயில் பாதையில் ரயில் சேவை ஏப்ரல் மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.

குறித்த இந்தப் பாதை நிர்மாணிக்கப்பட்ட பின்னர் நேற்று(06) பரீட்சார்த்த பயணம் இடம்பெற்றது. இதுதொடர்பான நிகழ்வில் உரையாற்றும் போதே போக்குவரத்து அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

மாத்தறையில் இருந்து கதிர்காமம் வரை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இந்த ரயில் பாதையின் நிர்மாணப்பணிகள் மூன்று கட்டங்களின் இடம்பெறவுள்ளது.

இலங்கையில் மிக நீளமான சுரங்க ரயில் பாதை மாத்தறை – பெலியத்த பாதையிலேயே அமைக்கப்பட்டுள்ளது.

சுமார் 615 மீற்றர் நீளமான சுரங்கப்பாதையும் 268 நீளமான இரண்டு சுரங்கப் பாதைகளும் இங்கு அமைந்துள்ளது.

 

 

 

 

Related posts

Gun shot aimed at wild boar kills friend

Mohamed Dilsad

திரிஷா வேடம் ஏற்றார் சமந்தா

Mohamed Dilsad

Bus strike against new road fines

Mohamed Dilsad

Leave a Comment