Trending News

வானிலை முன்னறிவிப்பு

(UTV|COLOMBO)-நாட்டைச் சூழவுள்ள கடற் பரப்பிற்கான வானிலை முன்னறிவிப்பு தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் உருவாகிய “PHETHAI” என்ற சூறாவளி ஒரு பாரிய சூறாவளியாக வலுவடைந்து 2018 டிசம்பர் 16ஆம் திகதி இரவு 11.30 மணிக்கு திருகோணமலைக்கு வடக்கு – வடகிழக்காகஅண்ணளவாக 620 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 14.0N, கிழக்கு நெடுங்கோடு 82.5E இற்கு அண்மையில் நிலை கொண்டுள்ளது.இத் தொகுதி வடக்கு-வடமேற்கு திசையில் இலங்கையை விட்டு விலகி நகரக்கூடிய சாத்தியம். காணப்படுகின்றது.

இத் தொகுதியின் தாக்கம் இன்றிலிருந்து படிப்படியாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மீனவ சமூகமும் கடலில் பயணம் செய்வோரும் திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான ஆழம் கூடிய கடற்பரப்புகளில் தமது நடவடிக்கைகளில் ஈடுபடும்போது இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வேண்டிக் கொள்ளப்படுகிறீர்கள்.

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் கூடிய கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு மற்றும் வடகிழக்கு ஆழம் கூடிய கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடக்கு முதல் வடமேற்கு வரையான திசைகளிலிருந்து வீசக்கூடும்.

வடக்கு மற்றும் வடகிழக்கு ஆழம் கூடிய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை காணப்படுவதுடன் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

வளிமண்டலவியல் திணைக்களம்

Related posts

Armed robber stole Rs. 1.7 million in Chavakachcheri,

Mohamed Dilsad

Prices of 95 Octane Petrol, Super Diesel increased

Mohamed Dilsad

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் எதிரானவர்கள்?

Mohamed Dilsad

Leave a Comment