Trending News

மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதியின் 65 லட்சம் டொலர்கள் நிதி முடக்கம்

(UTV|MALDIVES)-மாலைத்தீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா யாமீனின் வங்கிக் கணக்கிலுள்ள 65 லட்சம் டொலர்கள் நிதி முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற மாலைத்தீவு ஜனாதிபதித் தேர்திலில் அப்துல்லா யாமீன் அந்த நாட்டின் தற்போதைய ஜனாதிபதி இப்ராஹிம் மொகமட் சோலிடம் தோல்வியடைந்தார்.
குறித்த தேர்தலின்போது, அப்துல்லா யாமீன் அதிகாரத்தை முறைக்கேடாக பயன்படுத்தி 15 லட்சம் டொலர் நிதியை  பெற்றதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்றுவருகின்ற நிலையில், அவரது வங்கிக் கணக்கினை முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

Kanjipani Imran deported from Dubai taken to CID custody

Mohamed Dilsad

மின்சார சபை ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

Mohamed Dilsad

ரயில்வே பணிப்புறக்கணிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தம்

Mohamed Dilsad

Leave a Comment