Trending News

க.பொ.த சாதாரணதர பரீட்சை மேலதிக வகுப்புக்கள் நடத்த தடை

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் என்பனவற்றை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அறிக்கை ஒன்றை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

28 ஆம் திகதி நள்ளிரவு முதல் டிசம்பர் 12 ஆம் திகதி வரையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் குறித்த பரீட்சைகளுக்கான மேலதிக வகுப்புக்களை ஏற்பாடு செய்தல், அதனை நடத்துதல், கருத்தரங்குகளை நடத்துதல், மாதிரி வினாப்பத்திரங்களை அச்சிடுதல் மற்றும் விநியோகித்தல் போன்றவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு தனி நபரே அல்லது நிறுவனமே இந்த தடை உத்தரவை கருத்திற்கொள்ளாது நடவடிக்கைகளை மேற்கொண்டால் அவர் பரீட்சைகள் சட்டத்தின் கீழ் குற்றவாளியாக கருதப்படுவார் எனவும் பரீட்சைகள் திணைக்களம் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

யாரேனும் இவ்வாறான தடை உத்தரவை மீறியிருந்தால் 1911 என்ற அவசர இலக்கத்திற்கு அறிவிக்குமாறும் குறிப்படப்பட்டுள்ளது.

இவ்வருடம் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைகள் டிசம்பர் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

 

 

 

Related posts

Ward Place in Colombo temporarily closed from Town Hall end due to a protest (Update)

Mohamed Dilsad

29 ஆயிரத்திற்கும் அதிகமான சிகரெட்டுக்களுடன் ஒருவர் கைது

Mohamed Dilsad

අයහපත් කාලගුණයෙන් පීඩාව⁣ට පත් ජනතාවට සහන සලසන්න ආණ්ඩුවට වැඩපිළිවෙලක් නැහැ – චාමර සම්පත්

Editor O

Leave a Comment