Trending News

பல மாகாணங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை

(UTV|COLOMBO)-எதிர்வரும் ஒன்பது மணித்தியாலங்களுள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மாகாணங்களுடன், மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மழை பெய்யும் வேளைகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பாரிய மின்னல் தக்கங்கள் ஏற்படும் அவதான நிலைமைய இருப்பதால் அது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு கோரப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையோ அல்லது இரவோ வேளையோ மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், அக்கடற்பகுதிகள் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

යුද හමුදාවෙන් ඉවත් වූ අය පොලිස් සේවයට බඳවා ගැනීමේ සැලසුමක්

Editor O

Over 300 arrested during last 24-hours over traffic offences

Mohamed Dilsad

Frank Coraci To Helm “Sinbad” Reboot

Mohamed Dilsad

Leave a Comment