Trending News

தேசிய பாதுகாப்பு கற்கை நிலையத்தின் 5வது மாதாந்த கலந்துரையாடல்

(UDHAYAM, COLOMBO) – இலங்கை தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் மாதாந்த பாதுகாப்பு கலந்துரையாடல் இடம்பெற்றது.

அமைச்சின் மேலதிக செயலாளர் திரு. சரத் குமார தலைமையில் பாதுகாப்பு அமைச்சில் நேற்று இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்த மாதாந்த பாதுகாப்பு கலந்துரையாடல் புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைகழக சர்வதேச கற்கைகளுக்கான கல்லூரியின் பேராசிரியரும் தலைசிறந்த கல்வியியலாளருமான சுவர்ண சிங்கினால் ‘இந்தியாவின் பார்வையில் இலங்கையில் சீன – இந்திய உறவுகள்’ எனும் தொனிப்பொருளில் விரிவுரை ஒன்றும் நிகழ்த்தப்பட்டது.

குறித்த இப்பாதுகாப்பு கலந்துரையாடல் இலங்கையின் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் ஐந்தாவது மாதாந்த கலந்துரையாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் இலங்கையின் தேசிய பாதுகாப்பு கற்கைகளுக்கான நிலையத்தின் பணிப்பாளர் திரு அசங்க அபேகுனசேகர, முப்படையின் சிரேஷ்ட அதிகாரிகள், மற்றும் விஷேட அதிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

Neymar to have surgery on foot

Mohamed Dilsad

பலத்த காற்றுடன் இடியுடன் கூடிய மழை

Mohamed Dilsad

Kaling, Chopra team for wedding comedy

Mohamed Dilsad

Leave a Comment