Trending News

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோவின் வழக்கு எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்திவைப்பு

(UTV|COLOMBO)-சதொசவிற்கு சொந்தமான 5 மில்லியனுக்கும் அதிகமான நிதியை முறைக்கேடாக பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பேர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை இன்றைய தினம் குருநாகல் மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர முன்னிலையில் பிரசன்னப்படுத்திய வேளை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கிற்குரிய சில ஆவணங்களில் சிக்கல் நிலவுவதால் அவற்றை மேலும் பரிசோதனைக்கு உட்படுத்தி குறுக்கு விசாரணை செய்யப்பட வேண்டும் என பிரதிவாதி சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.

இதன்படி, இந்த வழக்கின் ஆவணங்கள் மீதான விசாரணை இடம்பெறுவதால் மீண்டும் சாட்சி விசாரணைகளுக்காக எதிர்வரும் 17 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Air Force deploys helicopter to douse Kalubovitiyana Forest fire

Mohamed Dilsad

மோதல் சம்பவம் தொடர்பில் சி.சி.ரி.வி காணொளிகள் பரிசீலனை…

Mohamed Dilsad

கொழும்பில் முதன்முறையாக வீதி கடவைகளுக்கு சூரிய மின்ஒளி கட்டமைப்பு

Mohamed Dilsad

Leave a Comment