Trending News

நிலைபேறான அபிவிருத்தி சட்டமூலம் மாகாண சபைகளின் நிவைப்பாடு – சபாநாயகர் சபையில் அறிவிப்பு

(UDHAYAM, COLOMBO) – மத்திய, வடமேல், சப்ரகமுவ, தென், மேல் மற்றும் ஊவா ஆகிய மாகாண சபைகள் நிலைபேறான அபிவிருத்தி சட்டமூலத்தை பரிசீலித்து, திருத்தங்களுக்கு உட்பட்டவகையில் உடன்பாட்டை தெரிவித்துள்ளன என்று சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்று பிற்பகல் 1 மணிக்கு கூடியது. இதனைத்தொடர்ந்து சபை அலுவல்கள் ஆரம்பமானது.

இதுதொடர்பான சபாநாயகரின்அறிவிப்பில் இந்த சட்டமூலம் தொடர்பில் உடன்பாட்டை தெரிவிக்க வடமாகாண சபை மறுத்துள்ளது என்று குறிப்பிட்ட சபாநாயகர் அரசியலமைப்பு திருத்தமொன்று கொண்டுவரப்படும் வரை சட்டமூலம் தொடர்பான பரிசீலனையை தாமதப்படுத்துவதாக கிழக்கு மாகாண சபை அறிக்கை சமர்ப்பித்துள்ளது என்றும் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு மாகாண சபைகளிடமும் இதுதொடர்பாக பெறப்பட்ட அபிப்பிராயங்கள் தேசியக் கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருக்கும் மற்றும் பொருளாதார அபிவிருத்தி துறைசார் மேற்பார்வை குழுவிடமும் சமர்பிக்கப்படும்  என்றும் சபாநாயகர் இதன் போது மேலும் தெரிவித்தார்.

இந்த  சட்டமூலம் 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9 ஆம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்பட்டது. அரசியலமைப்பின் 154 எ(5)(அ) உறுப்புரைக்கு அமைவாக  ஒவ்வொரு மாகாணசபைக்கும் சமர்ப்பிக்கப்ட்டன. 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10 ஆம் திகதியிலிருந்து ஒரு மாத காலத்திற்குள் மாகாணசபைகளின் அபிப்பிராயங்களை 46 அ(2)(அ) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் பாராளுமன்றத்துக்கு அனுப்பி வைக்குமாறு கோரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Alex Reid’s fiancee suffers third misscariage

Mohamed Dilsad

புகையிரத தொழிற்சங்க ஒன்றியம் – நிதியமைச்சருக்கும் இடையிலான கலந்துரையாடல் ஆரம்பம்

Mohamed Dilsad

Warner’s birthday Twenty20 ton as Australia slam Sri Lanka

Mohamed Dilsad

Leave a Comment