Trending News

மனைவியுடன் ஜிவி பிரகாஷ் கொடுக்கும் தேன் விருந்து

(UTV|INDIA)-பிரபல இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் ‘பார்ட்டி’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகிவிட்டது என்பதும் இந்த படத்தின் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவிக்கப்படவுள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் இந்த படத்தில் பிரேம்ஜி இசையில் கங்கை அமரன் வரிகளில் உருவான பாடலாகிய ‘தேன் புதுதேன்’ என்ற பாடலை ஜிவி பிரகாஷும் அவருடைய மனைவியும் பாடகியுமான சைந்தவியும் பாடியுள்ளனர். இந்த பாடல் வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தில் வெளியாகவுள்ளதாக இயக்குனர் வெங்கட்பிரபு தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். ரசிகர்களின் காதில் தேனாக இனிக்கும் இந்த பாடலை வரவேற்க அனைவரும் தயாராகுங்கள்.

ஜெயராம், சத்யராஜ், ஜெய், ஷாம், சிவா, ரம்யாகிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பேத்ராஜ் உள்பட பலர் நடித்துள்ள ‘பார்ட்டி’ திரைப்படத்தை அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரித்துள்ளார். ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவில், ப்ரவீண் படத்தொகுப்பில் உருவாகியுள இந்த படம் இம்மாத இறுதியில் வெளியாக வாய்ப்பு உள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

Related posts

ජ්‍යෙෂ්ඨ පොලිස් අධිකාරී සතිස් ගමගේ යළි රිමාන්ඩ්

Editor O

வேலையற்ற பட்டதாரிகள் 20,000 பேருக்கு நியமனம்

Mohamed Dilsad

நானாட்டான் பிரதேச சபை – உத்தியோகபூர்வ முடிவுகள்!

Mohamed Dilsad

Leave a Comment