Trending News

கடலில் எண்ணெய் கலந்தமைக்கு எதிராக நடவடிக்கை

(UTV|COLOMBO)-முத்துராஜவலை எரிபொருள் சேமிப்பகத்திற்கு எரிபொருளை கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவால் கடற்பரப்பு மாசடைந்துள்ளமை தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி கனிய எண்ணெய் மொத்த களஞ்சிய தொகுதிக்கு எதிராக காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக குறித்த அதிகார சபையின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

முத்துராஜவலை எரிபொருள் சேமிப்பகத்திற்கு எரிபொருளை கொண்டு செல்லும் குழாயில் ஏற்பட்ட கசிவால் திக்ஓவிட்ட முதல் பமுனுகம வரையான கடற்கரையில் எரிபொருள் தேங்கியுள்ளது.

எரிபொருள் கசிவால் குறித்த கடற்பகுதியில் தேங்கியுள்ள எரிபொருளை நீக்கும் பணியில் கடற்படையினர் மற்றும் எரிபொருள் கூட்டுத்தாபன அதிகாரிகள் உள்ளிட்ட 300 பேர் ஈடுபட்டுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

President performs tree planting custom for Sinhala & Tamil News Year

Mohamed Dilsad

372 கிலோ கிராம் பீடி இலைகளுடன் ஒருவர் கைது

Mohamed Dilsad

බිඳවැටුණූ ඔන්ලයින් සේවාවන් යථාතත්ත්වයට

Editor O

Leave a Comment