Trending News

மஹிந்தவின் வீட்டுக்கு செல்கிறது CID…

(UTV|COLOMBO)-ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பில் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ள குற்ற புலனாய்வு பிரிவு இன்று காலை, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின், கொழும்பு – 07 – விஜேராம மாவத்தையில் உள்ள அவரது உத்தியோக பூர்வ இல்லத்திற்கு செல்ல உள்ளது.

அதன்படி, குற்ற விசாரணை பிரிவின் கூட்டு கொள்ளை விசாரணை பிரிவின் பொறுப்பதிகாரி மற்றும் உதவி காவல்துறை அதிகாரி உள்ளிட்ட குழுவினர், மகிந்த ராஜபக்ஸவிடம் வாக்கு மூலம் பெற்றுக் கொள்ளும் பொருட்டு அவரின் இல்லத்திற்கு செல்ல உள்ளனர்.

கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரிடமும் முன்னர் குற்ற விசாரணை பிரிவினர் வாக்கு மூலங்களை பெற்றுள்ளது.

ஊடகவியலாளர் கீத் நொயார் கடந்த 2008ஆம் ஆண்டு மே மாதம் 22ஆம் திகதி கடத்தப்பட்டு தாக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

UNP lawyers request Ranil to remain party leader

Mohamed Dilsad

10 மணி நேரம் நீர் விநியோகம் தடை

Mohamed Dilsad

මත්ද්‍රව්‍ය ප්‍රවාහනය කරන බවට සැකසහිත යාත්‍රාවක් දකුණු මුහුදේදී අල්ලයි

Editor O

Leave a Comment