Trending News

கம்பஹா உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு 18 மணித்தியால நீர் விநியோகத்தடை

(UTV|COLOMBO)-திருத்த வேலைகள் காரணமாக களனி, வத்தளை மற்றும் பியகம பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் நாளை மறுதினம் (17) நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி 17 ஆம் திகதி இரவு 9.00 மணி முதல் 18 ஆம் திகதி அதிகாலை 03.00 மணி வரையான 18 மணிநேரம் இவ்வாறு நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என்று அந்த சபை தெரிவித்துள்ளது.

களனி மற்றும் வத்தளை பிரதேச சபைக்குட்பட்ட பகுதி, பேலியகொட மற்றும் வத்தளை – மாபோலை நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என்று அந்த சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் பியகம பிரதேச சபைக்குட்பட்ட பகுதியின் கோனவல வீதி, மகுரூவில வீதி, விஜயராம வீதி மற்றும் பெல்லேகல ஆகிய பிரதேசங்களிலும் நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

 

Related posts

රාජ්‍ය සේවයේ සියලුම අංශයන්හි වැටුප් සංශෝධනය සඳහා අමාත්‍ය මණ්ඩල අනුමැතිය

Editor O

நிவாரணப்பொருட்களுடன் சீனக்கப்பல்

Mohamed Dilsad

මැතිවරණ පැමිණිලි 2,863 දක්වා ඉහළට

Editor O

Leave a Comment