Trending News

குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் நேவி சம்பத் கைது

(UTV|COLOMBO)-பொலிஸாரால் தேடப்பட்டு வந்த நேவி சம்பத் என்பவர் குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

2008 ஆம் ஆண்டு கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமற் போன சம்பவம் தொடர்பில் அவர் தேடப்பட்டு வந்தார்.

லெப்டினென் கமாண்டர் ஹெட்டியாராச்சி முதியன்சலாகே சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி எனும் நேவி சம்பத் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியிருந்தனர்.

இந்நிலையில் கொழும்பு லோட்டஸ் வீதி பிரதேசத்தில் வைத்து அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

தங்க பிஸ்கட் தொகையுடன் பெண் ஒருவர் கைது

Mohamed Dilsad

ඉරාන ජනපතිට, ඉන්දියානු අගමැති මෝදිගෙන් දුරකථන ඇමතුමක්

Editor O

German synagogue shooting was far-right terror, justice minister says

Mohamed Dilsad

Leave a Comment