Trending News

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இவ்வருடம் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவு

(UTV|COLOMBO)-டெங்கை கட்டுப்படுத்துவதற்குத் தேவையான வைத்திய உபகரணங்கள், சிகிச்சை வசதிகள், வாகனங்கள் மற்றும் அலுவலக உபகரணங்கள் போதுமான அளவில் தேவையான இடங்களுக்கு வழங்கப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இவ்வருடத்தில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.

 

கடந்த ஆண்டு டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 86 ஆயிரம் ஆகும். இவ்வருடத்தில் இதுவரையில் பதிவு செய்யப்பட்ட டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 26 ஆயிரம் ஆகும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

 

டெங்கு நோயை ஒழிப்பதற்காக 1500 இளைஞர் யுவதிகள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் வீடு வீடாகச் சென்று டெங்கு நோய் தொடர்பான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

වාහන ගැන සුබ ආරංචියක්

Editor O

Pakistani couple arrested with heroin in their stomachs at BIA

Mohamed Dilsad

AG department expect to indict Makandure Madush

Mohamed Dilsad

Leave a Comment