Trending News

சபாநாயகரை சந்திக்கும் மகிந்த தேசப்பிரிய

(UTV|COLOMBO)-மாகாண சபை தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடலின் பொருட்டு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய இன்று முற்பகல் சபாநாயகர் கருஜயசூரியவை சந்திக்க உள்ளார்.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.

இதன்போது தேர்தல்களை பிற்போடாமல் விரைவில் நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட உள்ளது.

இலங்கையில், பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் இடையில் நேற்று முன்தினம் கலந்துரையாடல் இடம்பெற்றது.

அதன்போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் இந்த வலியுறுத்தல் விடுக்கப்படவுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட்   தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Hizbullah, Illangakoon to appear before PSC today

Mohamed Dilsad

Commissioner of Prisons Department arrested over Welikada riot

Mohamed Dilsad

රත්‍රං නිධානයක් හමුවෙයි.

Editor O

Leave a Comment