Trending News

சர்கார் படத்தை வாங்க பிரபல நிறுவனம் முயற்சி

(UTV|INDIA)-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் `சர்கார்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

இந்த நிலையில், படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை கைப்பற்ற படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் உடன் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தேனாண்டாள் பிலிம்ஸ் விஜய்யின் மெர்சல் படத்தை தயாரித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
விஜய்யின் அடுத்த படத்தை தயாரிப்பதற்கான பேச்சுவார்த்தையையும் தேனாண்டாள் பிலிம்ஸ் நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
சன் பிக்சர்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் வரலட்சுமி சரத்குமார் மற்றும் அரசியல் தலைவர்களாக ராதாரவி மற்றும் பழ.கருப்பையா நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இந்த படத்திற்கு கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார்.
படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

ராஜிதவின் முன்பிணை மனு நிராகரிப்பு

Mohamed Dilsad

Arrest warrants issued on four Theros over damaging public property

Mohamed Dilsad

ලෝක බැංකුවෙන් ශ්‍රී ලංකාවට ඩොලර් මිලියන 200ක්

Editor O

Leave a Comment