Trending News

அபிவிருத்தி நடவடிக்கைகள் நாட்டுக்கு பொருத்தமானதாக இல்லை- மயில்வாகனம் திலகராஜ்

(UTV|COLOMBO)-இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் நாட்டுக்கு பொருத்தமானதாக இல்லை என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அபிவிருத்தி நடவடிக்கைகள் அரசு சார்ந்ததாக அல்லாமல் ஆளுகின்ற அரசாங்கம் சார்பானதாக அல்லது அந்த கட்சி சார்பானதாக அல்லது ஒரு குடும்பம் சார்ந்ததாக அமைகின்றமையே இதற்கான காரணம் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ‘கோப்’ எனப்படும் பொது கணக்குகள் குழுவின் அறிக்கை மீதான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகின்றபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அரசியல் சார் அபிவிருத்தியாக அல்லாமல் அரசினால் முன்னெடுக்கப்படும் மக்களுக்கான அபிவிருத்தியாக வேலைத்திட்டங்கள் மாற்றப்படல் வேண்டும்.

அத்துடன், மதிப்பாய்வுக்கான தேசிய கொள்கை விரைவில் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் திலகராஜ் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Houthis hijack education in Yemen

Mohamed Dilsad

කතරගම සුරාසැල් පිළිබඳ තීරණයක්

Editor O

UAE troops return from Aden, handover to Saudi and Yemeni forces

Mohamed Dilsad

Leave a Comment