Trending News

சிறையில் வாடும் ஞானசார தேரருக்கான விதிமுறைகள்!!

(UTV|COLOMBO)-ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவியை தூற்றி அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள பொது பல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் , கலகொடஅத்தே ஞானசார தேரர் நேற்று பிற்பகல் வெலிகடை சிறைச்சாலைக்கு அழைத்து வரப்பட்டார்.

ஞானசார தேரருக்கு, ஹோமாகம நீதவான் நீதிமன்றம் நேற்று ஆறு மாதங்களில் கழிக்கும் வகையில் ஓராண்டுகால கடூழிய சிறை தண்டனை விதித்தது.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவிற்கு அச்சுறுத்தல் விடுத்த குற்றத்திக்காக, பொதுபல சேனாவின் பொதுசெயலாளர் கலகொட அத்தே ஞானசார தேருக்கு தண்டனை வழங்கும் வழக்கு விசாரணை ஹோமாகம நீதவான் நீதிமன்றில் நேற்று இடம்பெற்ற போது இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

நீண்ட விசாரணைகளின் பின்னர், இந்த வழக்கில் கலகொட அத்தே ஞானசார தேரர் குற்றவாளியாக கடந்த மே மாதம் 24ம் திகதி நீதிமன்றால் அறிவிக்கப்பட்டார்.

அத்துடன் அவருக்கான தண்டனை ஜூன் மாதம் 14ம் திகதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில், ஹோமாகம நீதவான் நீதிமன்றிற்கான பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

ஊடகவியலாளர் எக்னலிகொட கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட கடற்படை புலனாய்வுப் பிரிவைச்சேர்ந்த 9 பேரின் விளக்கமறியலை நீடித்த போது, கலகொட அத்தே ஞானசார தேரர் 2016ம் ஆண்டு நீதிமன்றில் பிரவேசித்து, நீதிமன்றை அவமதிக்கும் வகையில் செயற்பட்டிருந்தார்.

அத்துடன் சந்தியா எக்னலிகொடவையும் நீதிமன்ற வளாகத்தில் வைத்து அவர் அச்சுறுத்தி இருந்தார்.

2016ம் ஆண்டு ஜனவரி மாதம் 25ம் திகதி இந்த சம்பவம் இடம்பெற்றது.

இந்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஞானசார தேருக்கு ஆறு மாதங்களில் கழிக்கும் வகையில் ஓராண்டு கால சிறை தண்டனை விதிக்கப்பட்டதுடன், அச்சுறுத்தலுக்கு உள்ளான சந்தியா எக்னலிகொடவிற்கு 50 ஆயிரம் ரூபாய் நட்டஈடு வழங்கவும், 3 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தவும் உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள மற்றைய சிறைக்கைதிகளுக்கான அனைத்து விதிமுறைகளும் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கும் பொருந்தும் என சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடக பேச்சாளர் துஷார உபுல்தெரிய தெரிவித்தார்.

தேரர் கைதிகளின் ஆடையை அணிய வேண்டும் எனவும் , சிறப்பு பாதுகாப்பு தேவைப்படுமாயின் அதனை பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஞானசார தேரரை காண பொதுபல சேனா அமைப்பின் உறுப்பினர்கள் குழுவொன்று நேற்று மாலை வெலிகடை சிறைச்சாலைக்கு சென்றிருந்த போதும் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Sudan talks to resume soon as opposition halts strikes, says mediator

Mohamed Dilsad

ஓய்வு பெறும் ஆர்.பி.சிங்…

Mohamed Dilsad

ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில்

Mohamed Dilsad

Leave a Comment