Trending News

லோட்டஸ் டவரிலிருந்து தமிழ் இளைஞன் எவ்வாறு விழுந்தார்..உண்மைக் காரணம் வௌியானது..!

(UTV|COLOMBO)-கிளிநொச்சியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டு வரும் தாமரைக்கோபுரத்தின் மின்தூக்கியிலிருந்து விழுந்து உயிரிழந்தமைக்கான உண்மையான காரணம் கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு திடீர் மரண விசாரணை அதிகாரி இரேஷா சமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

தாமரைக்கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்தூக்கி இதுவரை முழுமையாக செய்து முடிக்கப்படவில்லை.

மின்தூக்கி செயற்படுவதற்கான செங்குத்தான வழி மாத்திரமே அமைக்கப்பட்டுள்ளது.

எனினும் அந்த பகுதி கடுமையான இருள் நிறைந்ததாக காணப்படுகின்றது.

அதற்கான கதவுகளும் பூட்டப்பட்டிருக்கவில்லை.

இந்த நிலையில் புதிதாக பணிகளுக்கு செல்பவர்களுக்கு அது தொடர்பில் அறிவுருத்தப்படுவதும் இல்லை.

மின் தூக்கியில் செல்வதற்காக காலடி எடுத்து வைத்தால் எந்த வித தடையுமின்றி விழுந்து உயிரிழக்க நேரிடும்.

அந்த வகையிலேயே குறித்த இளைஞரும் தாமரைக்கோபுரத்தின் 16 ஆவது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த கோணேஸ்வரனின் நண்பர் , தந்தை மற்றும் அவருடன் பணியாற்றிய சீன பிரஜை ஒருவர் சாட்சியமளிக்கையில்…..

அவருடன் பணிபுரிந்த சத்ய ரூபன் வயது – 28

கோணேஷ்வரன் எனது நண்பராவார். நாம் ஐவர் கொழும்பிற்கு தொழில் தேடி வந்தோம். நாம் பணிபுரியும் இடம் மோசமானது என, கடந்த 05 ஆம் திகதி அவர் என்னிடம் சுட்டிக்காட்டினார். மறுநாள் அவருக்கு வேலை வழங்கப்பட்டிருக்கவில்லை. ஒருநாள் கடந்த பின்னர் வேலைக்கு வருமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டது. கடந்த 08 ஆம் திகதி கடமைக்கு வந்த எம்மை ஒவ்வொரு இடத்தில் வேலைகளில் ஈடுபடுத்தினார்கள். நாளாந்தம் 1,500 ரூபா சம்பளம் வழங்கப்படும். ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் 3 ஆயிரம் ரூபா கிடைக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

இங்கு பணிபுரியும் சீன நாட்டவர்கள் எம்முடன் பிரச்சினைகளுக்கு வரமாட்டார்கள். இங்கு எந்த பிரச்சினையும் இருக்கவில்லை. நண்பர் பணிபுரியும் இடத்திற்கு நான் செல்லவில்லை. எனக்கு குறுஞ்செய்தியொன்றை நண்பர் ஒருவர் அனுப்பியிருந்தார்.

கோணேஷ்வரன் விழுந்து விட்டதாக அவர் அறிவித்திருந்தார். கோணேஷ்வரனின் தொலைபேசிக்கு அழைத்தாலும் அது செயலிழந்திருந்தது.

நான் அவர் விழுந்திருந்த இடத்திற்கு சென்று பார்க்கவில்லை. எனக்கு அவர் இருக்கும் கோலத்தை பார்க்க மனம் இருக்கவில்லை என்றார்.

கோணேஸ்வரனுடன் பணிபுரிந்த சீன நாட்டவரான குவே நினி வயது – 47

நாம் அவருடன் வேலை செய்து கொண்டிருக்கையில் சற்று நேரத்தில் அவரை காணவில்லை. நாம் செய்யும் வேலைகளுக்கு அவர் உதவி செய்வார். அவர் புதியவர் என்பதால் அவரை வேலைகளில் அதிகம் ஈடுபடுத்துவது கிடையாது. அவர் விழுந்திருப்பதாக ஒருவர் கூறினார். அதன் பின்னரே நடந்ததை அறிந்தோம் என்றார்.

கோணேஷ்வரனின் தந்தை

எனக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இறந்த மகன் குடும்பத்தில் மூத்தவராவார். எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் உயர் தர பரீட்சைக்கு தோற்ற இருந்தார். அவர் நண்பர்களின் வீடுகளில் தங்கித்தான் கற்றார். அவரின் நண்பர் கொழும்பில் வேலை செய்கிறார். பாடசாலை விடுமுறையில் அவர் தனது நண்பருடன் கொழும்பிற்கு வந்து இங்கு வேலை செய்திருக்கிறார். கடந்த 07 ஆம் திகதி தொலைபேசியில் என்னுடன் பேசினார். விடுமுறை என்பதால் கொழும்பு வந்ததாக கூறினார். நான் அதனை ஆட்சேபித்து வெள்ளிக்கிழமை வீட்டுக்கு வருமாறு கூறினேன். தாம் வெள்ளிக்கிழமை வருவதாக மகன் கூறினார். என்றார் அவரின் தந்தை.

இந்நிலையில் கோணேஸ்வரனின் சடலத்தை இலவசமாக கிளிநொச்சிக்கு கொண்டு வந்து தருவதாக தண்ணார்வ தொண்டு நிறுவனம் ஒன்று அறிவித்துள்ள போதிலும், பின்னர் அவரின் குடும்பத்தினரிடம் 30 ஆயிரம் ரூபா பணம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விடயம் அனைவரையும் வெகுவாக பாதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Austrian capital ranked as the most liveable city in the world

Mohamed Dilsad

Here’s how Jennifer Lopez, Shakira prepping up for Super Bowl show

Mohamed Dilsad

ජවිපෙ පැලවත්ත පක්ෂ කාර්යාලය අසළ උණුසුම් තත්ත්වයක්

Editor O

Leave a Comment