Trending News

பாலித ரங்கே பண்டாரவின் மகனின் விளக்கமறியல் நீடிப்பு

(UTV|COLOMBO)-இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டாரவின் விளக்கமறியலை நீடிக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாளை மறுதினம் 14ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க சிலாபம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுபோதையில் வாகனம் செலுத்தியமை மற்றும் பொதுச் சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆரச்சிகட்டுவ பொலிஸாரால் பாலித ரங்கே பண்டாரவின் மகன் யசோத ரங்கே பண்டார கைது செய்யப்பட்டார்.

விபத்தில் காயமடைந்த அவர் ஶ்ரீஜயவர்தபுர வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடந்த 08ம் திகதி நுகேகொட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த 06ம் திகதி, அதிகாலை யசோத ரங்கே பண்டார பயணித்த கெப் வாகனம் சிலாபம் – புத்தளம் வீதியில் பங்கதெனிய, கொட்டபிட்டிய சந்திப் பிரதேசத்தில் வீடொன்றின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதனால் நீர்ப்பாசன அமைச்சுக்கு சொந்தமான வாகனம் மற்றும் வாகனம் மோதிய வீட்டுக்கும் சேதம் ஏற்பட்டிருந்தமை கூறத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

US to send emergency assistance

Mohamed Dilsad

UPFA to boycott Parliament until it accept Standing Orders

Mohamed Dilsad

ஊடகவியலாளர்களுக்கான கடன் திட்டத்துக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை நீடிப்பு

Mohamed Dilsad

Leave a Comment