Trending News

சோளத்திற்கு உறுதி செய்யப்பட்ட விலையை பெற்றுக்கொடுக்க விவசாய அமைச்சு தீர்மானம்

(UTV|COLOMBO)-இலங்கையில் சோளம் உற்பத்தியை முறையாக முன்னெடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

சோளத்திற்கு உறுதி செய்யப்பட்ட விலையை பெற்றுக்கொடுப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது.

விசாய அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் இது தொடர்பான பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

நாட்டில் சோள உற்பத்தியில் பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.இந்த உற்பத்தியை முறையாக விரிவுப்படுத்த வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

வருடாந்தம் இலங்கையில் சோள உற்பத்தியை அதிகரிப்பதற்கான முறையான வேலைத்திட்டத்தை முறையாக முன்னெடுப்பதன் மூலம் உற்பத்தியாளர்களின் வருமானத்தை அதிகரிப்பதற்கு இலங்கையில் முதன் முறையாக சோளத்திற்கு உறுதி செய்யப்பட்ட விலையை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வருடாந்த சோளத்தின் தேவை 500 மெற்றிக்தொன்களாகும். இருப்பினும் தற்போது உள்ளுரில் 250 மெற்றிக்தொன் மாத்திரமே உற்பத்தி செய்யப்படுகின்றது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Al Ain shock River Plate in Club World Cup

Mohamed Dilsad

දසුන් ශානකට තනතුරක්…!

Editor O

වාහන අංක තහඩු මුද්‍රණය කිරීම නතර කර මාසයකට ආසන්නයි…!

Editor O

Leave a Comment