Trending News

தனஞ்சய டி சில்வாவின் தந்தை துப்பாக்கிச் சூட்டில் பலி

(UTV|COLOMBO)-இரத்மலானை – ஞானானந்த வீதியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இலங்கை அணியின் கிரிக்கட் வீரர் தனஞ்சயடி சில்வாவின் தந்தை உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த மேலும் இரண்டு பேர் களுபோவில மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்துள்ளவர் 63 வயதான தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபை உறுப்பினரான கே.ரஞ்சன்டி சில்வா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி பிரயோகத்திற்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் தொடர்பில் இதுவரை அறியப்படவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை காவல்துறை மேற்கொண்டு வருகிறது.

இதேவேளை, தந்தையின் உயிரிழப்பை அடுத்து, எதிர்வரும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தொடருக்காக செல்லும் இலங்கை அணியில், தனஞ்சய டி சில்வா பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஞானசார தேரரின் மேன்முறையீட்டு மனுவிற்கான தீர்ப்பு 31ம் திகதி…

Mohamed Dilsad

ACMC to support motion expressing confidence in Ranil

Mohamed Dilsad

India World Cup hero Yuvraj Singh ends cricket roller-coaster

Mohamed Dilsad

Leave a Comment