Trending News

அரச வெசாக் மகோற்சவம் நாளை ஆரம்பம்

(UTV|COLOMBO)-அரச வெசாக் மகோற்சவம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் பங்களிப்புடன் குருணாகல் மாவட்டத்தின் பிங்கிரிய தேவகிரி மஹா விகாரையில் நாளை இடம்பெறும்.

 

இதனை முன்னிட்டு ரஜமஹா விகாரை வெகு சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.

 

இம்முறை விகாரை மாத்திரமன்றி அரச, தனியார் நிறுவனங்களும் பௌத்த கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. வீதிகளில் தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.

 

அரச வெசாக் மகோற்சவத்துடன் இணைந்ததாக தான, தர்ம, தியான நிகழ்ச்சிகள் ஏற்படாகியுள்ளன.

 

விசாக நோன்மதியை முன்னிட்டு அரசாங்கம் தேசிய வெசாக் வாரத்தை பிரகடனப்படுத்தியிருந்தது. வெசாக் வாரம் நேற்று ஆரம்பமானது.

 

இதற்குரிய நிகழ்ச்சிகள் மே மாதம் இரண்டாம் திகதி வரை நடைபெறும். அரச வெசாக் மகோற்சபத்துடன் இணைந்ததாக ஞாபகார்த்த முத்திரையும், அற நூல்களும் வெளியிடப்படவுள்ளன.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜனாதிபதியின் மகா சிவராத்திரி வாழ்த்துச் செய்தியில்…

Mohamed Dilsad

DAYASIRI ONCE AGAIN CALLED UP BY THE PARLIAMENTARY SELECT COMMITTEE

Mohamed Dilsad

இயந்திர வாள்களை பதிவு செய்வதற்கான கால எல்லை நீடிப்பு

Mohamed Dilsad

Leave a Comment