Trending News

சினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை

(UTV|INDIA)-கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ஸ் அன்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் தனஞ்செயன் தயாரித்திருக்கும் படம் ‘மிஸ்டர் சந்திரமெளலி’.

கார்த்திக், அவருடைய மகன் கவுதம் கார்த்திக் முதல் முறையாக இணைந்து நடிக்கும் இந்த படத்தில் கவுதம் கார்த்திக் ஜோடியாக ரெஜினா கசாண்ட்ரா நடித்துள்ளார். வரலெட்சுமி சரத்குமார், இயக்குனர்கள் மகேந்திரன், அகத்தியன், சதீஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த, இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இதில் திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். சாம்.சி.எஸ் இசையமைத்திருக்கும் இந்த படத்தில் மொத்தம் 6 பாடல்கள் உள்ளன. இதில் மிஸ்டர்.சந்திரமௌலி என்ற பாடலை நடிகர் சிவக்குமாரின் மகளும், சூர்யாவின் தங்கையுமான பிருந்தா சிவக்குமார் பாடியிருக்கிறார். இந்த படத்தின் மூலம் இவர் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக், கவுதம் கார்த்திக் முதல்முறையாக இணைந்து நடித்திருப்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த படத்தின் டிரைலரை நடிகர் மாதவன் இன்று மாலை 6 மணிக்கு வெளியிடுகிறார். படம் விரைவில் ரிலீசாக இருக்கிறது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

NZ v Sri Lanka: Jimmy Neesham smashes five sixes in 34-run over

Mohamed Dilsad

Suicide Bombing Inside Shiite Mosque in Afghanistan

Mohamed Dilsad

Prime Minister advises police heads on reforms

Mohamed Dilsad

Leave a Comment