Trending News

சமந்தா முத்தத்துக்கு ரூ.10 லட்சம்

(UTV|INDIA)-ராம்சரண் தேஜா, சமந்தா நடித்த தெலுங்கு படம் ‘ரங்கஸ்தலம்’. திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்துக்கு ரசிகர்களிடம் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. 10 நாட்களில் உலக அளவில் சுமார் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளது.

இந்த படத்தில் ராம்சரண் – சமந்தா முத்தக்காட்சி ஒன்று இடம் பெற்றுள்ளது. முத்தக்காட்சியில் நடிக்க வேண்டும் என்று இயக்குனர் சொன்னதும் இருவரும் தயங்கி உள்ளனர். என்றாலும், இதையடுத்து காட்சியின் முக்கியத்துவம் கருதி அப்படி நடிக்க ஒப்புக்கொண்டுள்ளனர்.
ராம்சரண் தேஜாவுக்கு, சமந்தா முத்தம் கொடுப்பது போன்ற காட்சியை படமாக்கி உள்ளனர். பலமுறை டேக் வாங்கியபோதும் யதார்த்தமாக அமையவில்லை. மீண்டும் மீண்டும் அதை படமாக்கிய பிறகும் திருப்தி ஏற்படாததால், நேரம் போய்க்கொண்டே இருந்தது.
இதைபார்த்த தயாரிப்பாளர் இந்த காட்சியை சீக்கிரம் படமாக்கி முடித்தால் உங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு என்று டைரக்டர் சுகுமாரிடம் கூறியுள்ளார். நிலைமையை புரிந்து கொண்ட இயக்குனர் சமந்தாவிடம் மீண்டும் காட்சியை உணர்வுபூர்வமாக விளக்க 10 விநாடிகளில், சமந்தா, ராம்சரணுக்கு முத்தம் கொடுத்த காட்சி ‘ஓ.கே’ ஆகி இருக்கிறது. இதற்கு தயாரிப்பாளரிடம் ரூ.10 லட்சம் பரிசு பெற்றதை இயக்குனர் படக்குழுவினரிடம் தெரிவித்து மகிழ்ச்சி அடைந்துள்ளார்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Japanese technical support for Sri Lanka to manage natural disasters

Mohamed Dilsad

Rambukwella Says SLPP Suffered Setback Following LG Polls

Mohamed Dilsad

පාකිස්තානයේ දුම්රිය ස්ථානයක බෝම්බ පිපිරීමක්

Editor O

Leave a Comment