Trending News

கண்டிப் பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

(UTV|COLOMBO)-கடந்த மார்ச் மாதம் 5 ஆம் திகதி காலப்பகுதியில் கண்டிப் பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறைகள் தொடர்பாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதன் கீழ் இந்தப் பிரதேசங்களுக்கு விஜயம் செய்து பொதுமக்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்வதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

 

இதற்கமைவாக இந்த சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட மற்றும் இது தொடர்பில் ஆர்வம் கொண்டுள்ள தரப்பினரிடம் இருந்து தகவல்களையும், சாட்சியங்களையும் எழுத்து மூலம் திரட்டப்படவுள்ளது. இந்த விடயங்களை சமர்ப்பிக்கும்போது மூன்று பக்கங்களுக்கு மேற்படாத வகையில் தெரிவிப்பதற்கு சம்பந்தப்பட்ட நாள் மற்றும் இடம், நேரம், அடையாளம் காணப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட வேண்டுமென மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவர் கலாநிதி திருமதி தீபிகா உடகம தெரிவித்துள்ளார். இதனுடன் புகைப்படங்கள், காணொளிகள் அல்லது குரல் பதிவுகளையும் இதன் மூலம் சமர்ப்பிக்க முடியும்.

எழுத்து மூலமான இந்த விடயங்களை சமர்ப்பிக்கும்போது அவற்றை அவைக்க வேண்டிய முகவரி:

பிரதேச இணைப்பு அதிகாரி கண்டிப் பிரதேச அலுவலகம்,

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு,

இலக்கம் 8/1, பிரைம்ரோஸ் வீதி,

பேராதனை வீதி – கண்டி

 

எதிர்வரும் 21 ஆம் திகதிக்கு முன்னர் பதிவுத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

 

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு. 081 22 28 00 9 அல்லது 07 03 65 49 01 என்ற தொலைபேசி இலக்கங்கள் மூலம் தொடர்பு கொள்ள வேண்டும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Rugby World Cup semi-final: Wales 16-19 South Africa

Mohamed Dilsad

Aung San Suu Kyi defends prison sentences for Reuters journalists

Mohamed Dilsad

‘Plans to cultivate additional 100,000 hectares’

Mohamed Dilsad

Leave a Comment