Trending News

முன்னாள் இராணுவ புலனாய்வு பிரிவின் பணிப்பாளர் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-நேற்று கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் 18ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

2008 ம் ஆண்டு ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்ட சம்பவத்தில் அதற்கு உடந்தையாக இருந்ததாக சந்தேகத்தின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டார்.

இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக தங்கியிருக்கும் போது குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Divers deployed around volcano as 6 bodies found

Mohamed Dilsad

President to inaugurate Wayamba Ela Stage II tomorrow

Mohamed Dilsad

UN Officials visit Mullaitivu to obtain information on human rights

Mohamed Dilsad

Leave a Comment