Trending News

இரண்டாவது உலக யுத்த கால கப்பல் இலங்கை கடற்படையினரால் மீட்டெடுப்பு

(UTV|COLOMBO)-இரண்டாவது உலக யுத்த காலப்பகுதியில் திருகோணமலை துறைமுகப் பகுதியில் மூழ்கிய பிரிட்டிஷ் கடற்படைக்குச் சொந்தமான கப்பலொன்றை இலங்கை கடற்படை நீர்மூழ்கிப் பிரிவினர் மீட்டெடுத்துள்ளனர்.

75 வருடங்களின் பின்னர், இந்த கப்பல் இலங்கை கடற்படை நீர்மூழ்கிப் பிரிவினரால் மீட்டெடுக்க முடிந்தது.

 

138 அடி நீளத்தைக் கொண்ட இந்த கப்பல் சரக்கு ஏற்றிச் செல்லும் கப்பலாக 1924ம் ஆண்டு டிசம்பர் மாதம் 24ம் திகதி வெள்ளளோட்டம் விடப்பட்டது.

 

1942ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9ம் திகதி திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த வேளையில், ஜப்பான் விமான மூல் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலில் இந்த கப்பல் தீப்பற்றிக் கொண்டது.

 

இதனைத் தொடர்ந்து இந்தக் கப்பல் கைவிடப்பட்டது. 1943ம் ஆண்டு இது ஏனைய வள்ளங்களுக்கு இறங்குதுறையாக பயன்படுத்துவதற்கான வகையில் இதனை மூழ்கடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 

திருகோணமலை துறைமுகத்தில் வசதிகளை விரிவுபடுத்தும் நடவடிக்கையின் கீழ், மூழ்கியிருந்த இந்தக் கப்பல் 5 மாத நடவடிக்கைகளின் பின்னர், மீட்பதற்கு நடவடிக்கையினால் முடிந்தது.

 

இதற்கு டோக்கியோ சீமெந்து தொழிற்சாலை ஒத்துழைப்பு வழங்கியிருந்தது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அரசாங்கத்தின் அமைச்சரவை பேச்சாளர்களாக இரண்டு அமைச்சர்கள் நியமனம்

Mohamed Dilsad

Peliyagoda Interchange closed from tomorrow

Mohamed Dilsad

Railway Dept. to launch e-tickets by year end

Mohamed Dilsad

Leave a Comment