Trending News

நேபாள பிரஜையின் உடலில் இருந்து 90 ஹெரோயின் வில்லைகள் மீட்பு

(UTV|COLOMBO)-கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நேபாள் நாட்டவரின் உடலினுல் மறைத்து வைக்கப்பட்ட 90 ஹெரோயின் வில்லைகள் வில்லைகள் மீட்கப்பட்டுள்ளன.

டுபாயில் இருந்து வந்த சந்தேகநபர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளினால் கடந்த 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டிருந்தார்.

சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னர் அவர் மாத்திரைகளை விழுங்கியிருப்பது தெரிய வந்துள்ளதுடன், அதனையடுத்து சந்தேகநபர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

மீட்கப்பட்ட ஹெரோயின் வில்லைகளின் பெறுமதி சுமார் 90 இலட்சம் ரூபா என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேகநபர் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

පළාත් පාලන මැතිවරණයට අදාළව අධිකරණ නියෝගයක්

Editor O

Minister Bathiudeen sends greetings to Commonwealth Secretary-General

Mohamed Dilsad

ரசிகர்களை ஏமாற்றிய சூர்யா

Mohamed Dilsad

Leave a Comment