Trending News

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீது 04ம் திகதி விவாதம்

(UTV|COLOMBO)-பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் சமர்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீது எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04ம் திகதி விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று நடந்த கட்சித் தலைவர்களின் விஷேட கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் 55 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.

குறித்த பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீது நம்பிக்கையில்லாமல் போவதற்கான 14 காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தவிர ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நான்கு உறுப்பினர்களும் கையொப்பமிட்டுள்ளனர்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

தீர்வின்றி தொடரும் போராட்டங்கள்

Mohamed Dilsad

Two Reuters journalists jailed in Myanmar

Mohamed Dilsad

අධිකරණය විශ්වාසයි – සත්‍ය ජයගන්නවා – ක්‍රිෂ් චෝදනාවට නාමල්ගෙන් X සටහනක්

Editor O

Leave a Comment