Trending News

விபத்தில் உயர்தர மாணவர் பலி

(UTV|COLOMBO)-பதுளை – கந்தெகெட்டி – மஹயாய பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் உயர்தரம் கற்கும் பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

குறித்த பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோள அறுவடையினை தொடர்ந்து அதனை உழவு இயந்திரத்தில் ஏற்றிக்கொண்டு சென்ற குறித்த மாணவன், உழவு இயந்திரத்தின் வேகக்கட்டுப்பாட்டினை கட்டுபடுத்த முடியாமல்  விபத்துக்குள்ளாகியுள்ளார்.

குறித்த பகுதியை சேர்ந்த 18 வயதுடை அஷான் – விராச் என்ற மாணவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

We don’t want war but we won’t hesitate to deal with threats: Saudi Crown Prince

Mohamed Dilsad

තැපැල් ඡන්දය සලකුණු කිරීමේ අවසන් දිනය අද

Editor O

ஆடிஅம்பலம – விமான நிலைய வீதியின் ஒரு ஒழுங்குக்கு பூட்டு

Mohamed Dilsad

Leave a Comment