Trending News

கண்டிப்பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு

(UTV|COLOMBO)-கண்டிப்பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது.

இதுதொடர்பான நிகழ்வு கண்டி மாவட்ட செயலகத்தில் இன்று காலை இடம்பெற்றது.

இதன் போது குண்டசாலை, ஹாரிஸ்பத்துவ, பூஜாப்பிட்டிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள 136 பேருக்கு இழப்பீடுகள் வழங்கப்பட்டன. சிறிய நடுத்தர பூரண அடிப்படைகளில் சொத்துக்களுக்கான இழப்பீடுகள் வழங்கப்படுகின்றன.

உயிர் சேதங்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய 05 இலட்சம் ரூபா வழங்கப்படுவதோடு, முதல் கட்டமாக ஒரு இலட்சம் ரூபா இன்று வழங்கப்பட்டது.

அமைச்சர் அப்துல் ஹலீம், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, மத்திய மாகாண முதலமைச்சர் சரத் எக்கநாயக்க உட்பட பல பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Air Force to take over Nevil Fernando Hospital

Mohamed Dilsad

Sarath Kumara & 5 others banned from travelling overseas

Mohamed Dilsad

Sacked Tillerson issues Russia warning

Mohamed Dilsad

Leave a Comment