Trending News

நடிகை காஜல் அகர்வாலுக்கு 32 வயது ஆகிறது. இவரது தங்கை நிஷா அகர்வாலுக்கு 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் முடிந்துவிட்டது. காஜல் அகர்வாலுக்கும் விரைவில் திருமணத்தை முடிக்க பெற்றோர்கள் அவசரப்படுகின்றனர். தற்போது பாரிஸ் பாரிஸ் என்ற தமிழ் படத்திலும், எம்.எல்.ஏ. என்ற தெலுங்கு படத்திலும் நடித்துக்கொண்டு இருக்கிறார்.

திருமணம் எப்போது என்று காஜல் அகர்வாலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

“நான் எங்கு போனாலும் எப்போது கல்யாணம், யாரை காதலிக்கிறீர்கள் என்றுதான் கேட்கிறார்கள். என்னை காதலிப்பதாக நிறைய பேர் சொல்லி இருக்கிறார்கள். நானும் காதலை உணர்ந்து இருக்கிறேன். இரண்டு பேர் மீது அது ஏற்பட்டு இருக்கிறது. சினிமாவுக்கு வருவதற்கு முன்னால் ஒருவர் மீதும், நடிகையான பிறகு ஒருவர் மீதும் அந்த உணர்வு ஏற்பட்டது.

நடிக்க வருவதற்கு முன்னால் காதலிப்பது என்பது எளிது. ஆனால் சினிமாவுக்கு வந்து பெயர், புகழ் கிடைத்த பிறகு காதலிப்பது கஷ்டம். அதற்கு நேரம் கிடைக்காது. காதலித்தால் அதற்கென்று நேரம் ஒதுக்க வேண்டும். காதலர்கள் அடிக்கடி சந்தித்துக்கொள்ள வேண்டும். சந்திக்க கூட நேரம் ஒதுக்க முடியாவிட்டால் காதலித்து என்ன பிரயோஜனம்.

எனக்கு காதலிக்க நேரம் இல்லை. திருமணத்துக்கும் தயாராகவில்லை. இத்தனை காலம் நடிகையாக இருக்கும் எனது பயணத்தில் நிறைய நடிகர்கள் வந்துபோய் இருக்கிறார்கள். அவர்களுடன் ஒரு எல்லைக்குள்தான் எனது பழக்கம் இருந்தது. அந்த எல்லையை தாண்டியது இல்லை. ஒரு சிலரை தவிர மற்ற நடிகர்களுடன் நட்பாகவும் பழகியது இல்லை.

சினிமாவில் நாளுக்கு நாள் மாற்றங்கள் வருகிறது. ரசனையும் மாறுகிறது. அதற்கேற்ப என்னை நான் மாற்றிக்கொள்கிறேன். கதாபாத்திரங்களையும் புதிது புதிதாக தேர்வு செய்கிறேன். இதற்காக நிறைய படங்களை பார்க்கிறேன். வித்தியாசமான மனிதர்களை சந்திக்கிறேன். ரசிகர்களுக்கு அலுப்பு வராமல் இருக்க ஒரே மாதிரியாக நடிக்காமல் வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிக்கிறேன்.”

இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

New Zealand relief following floods in Sri Lanka

Mohamed Dilsad

වාහන බදුවලින් භාණ්ඩාගාරය පිරී ඉතිරී යයි

Editor O

Prime Minister wants India and Japan cash to balance China

Mohamed Dilsad

Leave a Comment