Trending News

சாலாவ கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும் நிலையமொன்றில் தீ

(UTV|COLOMBO)-கொஸ்கம பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சாலாவ பிரதேசத்தில் உள்ள கட்டிட பொருட்கள் விற்பனை செய்யும் நிலையமொன்றில் இன்று (28) அதிகாலை 1 மணியளவில் தீ விபத்தொன்று ஏற்பட்டுள்ளது.

கொஸ்கம பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் உடனடியாக செயற்பட்ட பொலிஸார், இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர், பிரதேசவாசிகள் மற்றும் கொழும்பு தீயணைப்பு படையினர் ஆகியோரின் உதவியுடன் தீ முழுமையாக அணைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தீ விபத்து காரணமாக எவ்வித உயிராபத்துக்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

தீ ஏற்பட காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை என்பதுடன் தீயினால் ஏற்பட்ட அழிவு தொடர்பிலும் இதுவரையில் மதிப்பீடு செய்யப்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பில் கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள உள்ளனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

පොහොට්ටුවේ ප්‍රතිපත්ති ප්‍රකාශය එළිදැක්වීම සැප්තැම්බර් 02දා

Editor O

Range Bandara claims he was offered USD 2.8 million to cross over

Mohamed Dilsad

ஓரினச் சேர்க்கை குற்றமல்ல?

Mohamed Dilsad

Leave a Comment