Trending News

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும் மகனும் பலி

(UTV|HAMBANTOTA)-ஹுங்கம, கஹதமோதர குளத்திற்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும், மகனும் பலியாகியுள்ளனர்.

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மின்கம்பம் ஒன்றில் மோதியதில் நேற்று இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த தந்தை மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரண்டு பிள்ளைகளும் ரன்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தந்தை உயிரிழந்துள்ளதுடன், ஒரு மகன் மேலதிக சிகிச்சைக்காக தங்காளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த மற்றைய மகன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றார்

கஹதமோதர, ரன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய தந்தையும், 6 வயது மகனுமே இந்த விபத்தில் பலியானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

பெண்ணாக மாறிய அனிருத்?

Mohamed Dilsad

GCE O/L – Health to be made a compulsory subject

Mohamed Dilsad

Parliament: MPs and peers return after court rules shutdown unlawful

Mohamed Dilsad

Leave a Comment