Trending News

இன்று பூரண சந்திர கிரகணம் – இந்தியா, மத்தியக் கிழக்கு கிழக்கு ஐரோப்பிய நாடுகளிவும் தெரியும்

(UTV|COLOMBO)-இந்தாண்டின் முதல் சந்திர கிரகணம், இம்மாதத்தின் 2 ஆவது நோன்மதி தினமான இன்று இடம்பெறுகிறது.

1866ம் ஆண்டின் பின்னர் முதற் தடவையாக முழு வட்ட சந்திரனையும், பூரண சந்திர கிரகணத்தையும் இலங்கையில் பார்வையிடலாம்.

 

இந்த அரிய நிகழ்வு இந்தியா, மத்தியக் கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் முழு கிரகணமாக தெரியும். அலாஸ்கா, ஹவாய், வடமேற்கு கனடா ஆகிய நாடுகளில் தொடக்கம் முதல் முடிவு வரை கிரகணத்தை பார்க்க முடியும். அதேசமயம், பிற வடக்கு மற்றும் மத்திய அமெரிக்காவில் இதனை முழுமையாக பார்க்க முடியாது.

 

இந்த கிரகணம் பிற்பகல் 4.21 இற்கு தென்படும். பூரண சந்திர கிரகணம் மாலை 6.22 முதல் 7.38 வரை தென்படும். இரவு 7.31 முதல் 8.41 வரை பாதியளவில் சந்திரன் தென்படவுள்ளது. இரவு 9.31 இற்கு சந்திர கிரகணம் முடிவடையும்.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் சந்தன ஜயரட்ன இதுதொடர்பாக தெரிவிக்கையில் நீல நிலவு என்றழைக்கப்படும் இந்த சந்திரனை எந்த தடங்கலும் இன்றி முழுமையாக இலங்கையிலுள்ளவர்களுக்கு காணக் கிடைக்கின்றமை சிறப்பம்சமாகும்.

 

ஏனைய நோன்மதி (போயா )தினங்களை விட 14 சதவீதம் பெரிதாகவும் 30 சதவீதம் வெளிச்சமாகவும் இந்த சந்திரன் தென்படும். சந்திரன் பூமிக்கு நெருக்கமாக சூழலுகின்றமை இதற்கான காரணமாகும் என்று பணிப்பாளர் சந்தன ஜயரட்ன குறிப்பிட்டார்.

 

சந்திர கிரகணம்: நிலவுக்கும், சூரியனுக்கும் இடையில் பூமி வரும்போது, நிலவின் மீது படும் சூரிய ஒளி பூமியால் தடுக்கப்படுகிறது. அதாவது, பூமியின் நிழல் நிலவின் மேல் விழுகிறது. அதனால் சந்திரன் சிறிது நேரம் மறைந்து போகிறது.

 

பூமியின் நிழலில் இருந்து சந்திரன் வெளியில் வந்தவுடன் மீண்டும் பிரகாசிக்கிறது. இதுவே சந்திர கிரகணமாகும். சூரியன் இருக்கும் திசைக்கு எதிர்த்திசையில் நிலவு இருக்கும்போதுதான் இது சாத்தியம் என்பதால் எப்போதும் பௌர்ணமி நாளில் தான் சந்திர கிரகணம் இடம்பெறுகிறது..

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Mobile payment for Nutrition Programme for pregnant mothers

Mohamed Dilsad

Three UPFA Parliamentarians sworn in as Cabinet Ministers

Mohamed Dilsad

இலங்கை கிரிக்கெட் உள்ளிட்ட 09 நிறுவனங்கள் கோப் குழு முன்னிலையில்

Mohamed Dilsad

Leave a Comment