Trending News

இலங்கையின் நுகர்வோர் நலன் கருதி, ஐக்கிய நாடுகளின் நுகர்வோர் பாதுகாப்பு மீதான நெறிமுறைகளை பின்பற்ற நுகர்வோர் விவகார அதிகார சபை இணக்கம்!

(UTV|COLOMBO)-வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையின் நுகர்வோர் நலன் கருதி ஐ.நா வின் நுகர்வோர் பாதுகாப்பின் இலங்கையின் இரண்டு தலைமை நிறுவனங்களின் கூட்டு பங்காளரான ஐக்கிய நாடுகளின் தொழில்துறை அபிவிருத்தி அமைப்பும், கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் நுகர்வோர் விவகார அதிகார சபையும் ஐ.நாவின் நுகர்வோர் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கான நெறிமுறைகளை பின்பற்றவுள்ளதாக, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

ஷாங்கிரி லா ஹோட்டலில் இடம்பெற்ற நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பாக ஐ.நா பற்றிய இலங்கை ஒழுங்குமுறை தாக்க மதிப்பீடு குறித்த ஆரம்ப நிகழ்வின் நோக்கத்தை அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் உரையினை அமைச்சரின் மேலதிக செயலாளர் எம்.ஏ.தாஜுடீன் வாசித்தார்.

இந்த ஆரம்ப நிகழ்வில் ஐ.நா.வின் இலங்கைக்கான வதிவிட ஒருங்கிணைப்பாளர்    வுனா மெக்கலே, நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹசீதா திலகரட்ன, ஐக்கிய நாடுகளின் தொழில்துறை அபிவிருத்தி அமைப்பின் கொழும்பு மையப்புள்ளியின் தலைவர் நவாஸ் ரஜாப்டீன், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் சிரேஷ்ட ஆலோசகர் திருமதி ஹிமாலி ஜினதாஸா, ஐக்கிய நாடுகளின் தொழில்துறை அபிவிருத்தி அமைப்பின் ஒழுங்கு முறை சீர்திருத்தத்திற்கான மூத்த ஆலோசகர் திருமதி. டெலியா ரோட்ரிகோ மற்றும் இலங்கை முகவர் நிலையங்களில் இருந்து 30 க்கும் அதிகமான ஒழுங்குமுறை கட்டுப்பாட்டாளர்கள் கலந்துக்கொண்டனர்.

அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் உரையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்ததாவது,

முதல் தடவையாக, கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சும், நுகர்வோர் விவகார அதிகார சபையும்  தேசிய அளவிலான தயாரிப்புகள், சேவைகள், ஆகியவற்றின் மீதான நுகர்வோர் பாதுகாப்பு பற்றிய ஆழமான மறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றது. அத்துடன் 100 க்கும் அதிகமான நாடுகளால் மதிக்கப்படும் உலகளாவிய தரநிலைகளை பின்பற்றவுள்ளது.

வரலாற்றில் முதல் தடவையாக இலங்கையின் நுகர்வோர் நலன்கருதி ஐ.நாவின் நுகர்வோர் பாதுகாப்பின் இலங்கையின் இரண்டு தலைமை நிறுவனங்களின் கூட்டு பங்காளரான ஐக்கிய நாடுகளின் தொழில்துறை அபிவிருத்தி அமைப்புமும் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் கீழ் இயங்கும் நுகர்வோர் விவகார அதிகார சபையும் ஐ.நாவின் நுகர்வோர் பாதுகாப்பு வழிகாட்டுதல்களுக்கான நெறிமுறைகளை பின்பற்றவுள்ளது.

தேசிய நுகர்வோர் நலன் கொள்கையை வடிவமைப்பதற்காக நுகர்வோர் விவகார அதிகார சபையும் வெற்றிகரமாக சட்டவிதிகளுக்கேற்ப செயற்படுமிடத்து நுகர்வோரின் நம்பிக்கையை பெற்றுக்கொள்வதுடன், வர்த்தக நடவடிக்கைகளை சிறந்த முறையில் முன்னோக்கி கொண்டுசெல்ல முடியும்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

China reverses ban on trade in products made from endangered tigers, rhinos

Mohamed Dilsad

இன்று(20) புதிய அமைச்சரவை பதவிப்பிரமாணம்

Mohamed Dilsad

Dambara Amila Thero’s petition to taken up on Jan. 07

Mohamed Dilsad

Leave a Comment